நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Monday, September 26, 2011

கல்யாணம் முடிஞ்சாச்சு !!!! காதலில் விழுந்தாச்சு !!!!



எனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக
தூங்க மடி தரும் அன்னையாக..,

கை பிடித்து நடக்கும் தந்தையாக
தோள் சாய்ந்து  பேசும் தோழியாக..,
அடித்து சண்டையிடும் தம்பியாக
என்றும் பாதுகாக்கும் அண்ணனாக..,

காதலோடு பழக காதலனாக
என் வாழ்க்கைக்கு துணையாக ..,
வந்த 
என் கணவனால்  

புரிந்துக்கொண்டேன் காதலை !!!





முதல் காதல் 

"ஏன் சிரிக்கிறாய்" ,என்று கோபமாக  தான் கேட்டேன்
அவனோ " உன் கோபத்தில் எனக்கு ஒரு கவிதை தோணுச்சு 
என் சிரிப்பில் உனக்கு ஒரு காதல் தோன்றியது போல"
என்றானே சிரித்துக்கொண்டே
மறுபடியும் விழுந்தேன் காதலில்..



வெட்கத்தில் கொஞ்சம் கண்ணீர் 

"நீ குழந்தைடி"  என்று கேலி செய்ய
"இல்லை இல்லை நான் உனக்கு என்றும் பிடித்த அம்மா" என்றதும்
"ஏன் நான் அம்மா மாதிரி இல்லையா..?" 
"ம்ம்ம்..?" என்று விழித்ததில்.. சிரித்தான்..
இம்முறை காதல் என் கண்களில் கண்ணீராக ..



இரவில் பேசிய ரகசியம் 

என் காதருகில் ரகசியம் பேசினான் " தூங்கிட்டியா" 
"இல்லையே.." என்றேன் 
" அப்போ காதலிக்கிறேன்னு சொல்லு " என்று அதட்டினான் 
"நான் தூங்கிட்டேன் .." என்றேன் சட்டென்று 
" ம்ம்ம் .. குட்நைட்  கள்ளி " என்றானே சிரித்துக்கொண்டே..
பார்க்கவில்லை என்றாலும் 
அவன் சிரிப்பதை உணர்ந்தேன் 
காதலில் விழுந்தேன்
கனவில் மிதந்தேன் .. 



என் கணவனுக்கு நான் தான் காதலி 

நடு ராத்திரியில் என்னை எழுப்பி
"என் காதலி  
காதலை சொல்லுடி" என்றான் 
"என் கணவா
இது என்ன கனவா ??? " 
என்று  தூக்க-கலக்கத்தில்  கேட்க  

"நிஜமா 
நிஜத்தில் 
ஒரே ஒரு முறை.."

"நானும் சிரிப்பேனே "ஈ...."
காதலில் விழு பிறகு சொல்றேனே .."
.........................
பதில்  வரவே  இல்லை  


  

நெஞ்சம் பொறுக்கவில்லை அழுகை நிறுத்தவில்லை 

ஒரு மாலை நேரம் 
சிரித்துக்கொண்டே இருந்தான்
ஏதோ ஒரு சங்கடத்தில் " என் இப்படி சிரிக்கிற " என்று கேட்க
" நீ காதலில் விழுவாய் என்றால்
சிரித்துக்கொண்டே கூட  சாவேன்
என் செல்லமே.." என்றானே போதும்
விடியும் வரை அழுது கொட்டி தீர்த்தேன்.., 
என்னவன் சமாதானம் செய்து கொண்டே இருக்க.. 



விடிந்ததும் குழப்பம் 


தூங்கிகொண்டே இருந்தான்
நான் பார்த்துக்கொண்டே இருக்க

கண்கள் மூடியபடி 
உதடு மட்டும் அசைந்தது " பார்த்தது போதும்" என்றான் 
புன்முறுவலில் என்னை மயக்கியபடி ..
" பார்க்க பார்க்க பிடிக்குமோ என்று பார்த்தேன்" என்றேன் முணுமுணுத்தப்படி 

" அப்போ பிடிக்கலையா ..?" என்று கண்விழித்து  கேட்டான்
பதில் சொல்லாமல் கடுப்பில் சென்றேன்..
அவன் குரல் மட்டும் தூரத்தில்
"எங்கடி போற..??? 
..................................
சரி என்ன பாரேன் கொஞ்ச நேரம்.. 
...................................
நிஜமாவே பிடிக்கலையா ..??? "
வெட்கத்தில் ஒளிந்தேன்
சமையல் அறையில்...  



காதலை சொல்லியாச்சு 

" என் கால்களை
தொட துடிக்கும் 
அலைகள் மீது 
என்ன கோபமோ..
என்னை தூக்கிக்கொண்டே நடந்தா
னே
சிடு சிடுவென கடற்கரையில்.."


"கோமா..??"
என்று கேட்டேன்  தயக்கத்துடன் 
"ம்ம்.." பதில் மட்டும் விடுக்கென்று 

"எவ்ளோ கோவம்??"
"..................."
"சொல்லேன்"
".................."
"சிரி"
"........................."

"ஹ்ம்ம்.. 
ரி  .. 
காதலிக்கிறேன் போதுமா..?"
"......................."
பதில் சொல்லாமல் விடு விடு என்று நடந்துக் கொண்டே இருந்தான் ..

"என்ன ஆச்சு..??"
என்று அலையோசை சத்தத்தையும் மீறி கேட்க 


" நானும் காதலிக்கிறேன் "
என்றான் பொறுமையாக..

"ஓஹோ எப்போதிலிருந்து ..?"
என்றேன் மெதுவாக 
"நீ அப்போ சிரிச்ச ல.."
பதில் வந்தது மிகவும் சாதாரணமாக 
"நா உன்ன மாதிரி அழகாலாம் சிரிக்க மாட்டேனே.."என்றேன் 

"போடி பைத்தியம் " என்று சொல்லி சிரித்தானே
அட கடவுளே.. 
எத்தனை முறை தான்
நான் காதலில் விழுவேன்.. !!!!