நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Saturday, April 23, 2011

அழகே அழகு..





அன்னியரிடம் பேசினால் 
அடி தான் என்று 
என் வாழ்க்கையின் ஆதியில் 
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே  சொன்னாளே 
அழகே அழகு.. 

மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே   
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..

அன்றொரு நாள் 
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் 
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது 
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
  
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக 
காண்பித்தேனே
அழகே அழகு..

சித்தி ...
எனக்கு ...
மருதாணி... 
என்று நான்கு வயது குழந்தை 
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே 
மருதாணி போட்டு கொண்ட நினைவு 
அழகே அழகு..

அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
 என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..

கண்களை மூடினேன் குழப்பத்துடன் 
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு 
புரியாத புதிர் 
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..

அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன் 
அழகே அழகு...  

என் தோழியை சுற்றி எத்தனை பேர்
 மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல் 
எங்களை  அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ  
இருவர் மட்டும் சேர்ந்து போகயில் 
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு.. 
  
நான் வளர்க்கும் காகம் 
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில் 
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..  

பல நாட்களுக்கு பிறகு  
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும் 
ஒரு குறுந்தகவல்  "enna panra"
அழகே அழகு...  

சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே 
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து 
என் உடையை லேசாக நனைத்தாளே 
அழகே அழகு.. 


நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு.. 

அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே 
அழகே அழகு ..

"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு  சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே    
அழகே அழகு.. 
  
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும்  நடக்கையில் 
உயிர் தோழி என்ற எண்ணம் 
அழகே அழகு...  
  
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 
நிறைய அழகுகள் 
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும் 
அழகே அழகு..



Friday, April 22, 2011

தலைப்பை இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்



நமக்கான நாட்களை 
வலைவீசி தேடி
நமக்கான பொழுதுகளை
மறுபடி நினைத்துக்கொண்டு
சிரிக்கிறாய் 
அழுகிறாய் ..
பொக்கிஷமாக நெஞ்சில் புதைக்கிறாய் ... 

னக்கு பிடித்தவன் 
கேட்டு கொண்டே இருந்ததான் 
நீ  பேசி கொண்டே இருக்க..

வருந்துகிறேன்..
ஒரு முறை அவன் பேசி 
நீ கேட்கவில்லையே.. 
இன்று கேட்காமலே சென்றான்
நீ பேசி கொண்டே இருக்க..

நேரம் போனதே தெரியாமல் 
பேசிய பொழுதுகள் கேட்கின்றன
உன்னிடம் பேச அவனுக்கு எங்கே நேரம்...

காத்துக்கொண்டிருந்த பொழுதுகள் கேட்கின்றன
அவனை நினைக்காமல் இருக்க உனக்கு எங்கே நேரம்..

உன் பெயரை எழுதுகையில் அவன் பெயர் மனதில் ஓட 
கவிதை பிறக்கையில் அவனே நினைவில் வர
தலைப்பை மட்டும் இன்னமும் 
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்  ...





Wednesday, April 13, 2011

புதிய பெயர்




நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி.. 
அவள் உடல் சிலிர்த்தது.. 
கண்களில் கண்ணீர்.. 
உதட்டில் புன்னகை.. 
முகத்தில் வெட்கம்.. 
மனதில் சந்தோஷம்.. 
புதியதோர் உணர்வு..


நாட்கள் கடந்த வேகமோ அதிகம்.. 
தனியாக சிரித்தாள் - பைத்தியமில்லை.. 
ரகசியமாக பேசினாள்  - கைபேசி காதல் இல்லை..
 அமுத மொழிகளையும்  
ஆசை வார்த்தைகளையும்  
பேசி கொஞ்சி 
உன்னை அழகாக  கவர்ந்தாள் அவள் அறியாமலேயே.. 
ஏனோ இன்ப வேதனையில் மூழ்கினாள்..


அறுசுவை உணவும் பழச்சாறும்  பிடிக்கவில்லை.. 
உண்ணவும் மறுக்கவில்லை.. 
"உறங்காமல் எந்த நாட்டை பிடிக்க இந்த ஆழ்ந்த சிந்தனை"  - என்ற  
வசை மொழிகள் அவள் காதில் விழவில்லை.. 
எதிர்காலத்தின் கனவுகள் - அவள்  
உயிரோடு கலந்துவிட்ட உனக்காக  
அவள் போடும்  திட்டங்கள்
இயற்கை தீட்டும் வண்ணங்களுக்கு சமமாகுமா...??? 


உன் முகம் பாராமல் அவள்  காட்டும் அன்போ  
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்.. 
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!! 
பூமியில் கால் கூட பதிக்காமல்  
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்  
அவள் அன்பில் சிறைபட்டாய்.. 
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???


நகங்களால் கீறி உன்  
ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினாய்.. 
உலகத்தின் சார்பில் அவள் - ஒருத்தி 
காத்திருந்தாள் உனக்காக மட்டும்.. 
அவள் அழுதால் கதறினால் - வலி  
தாங்குமா உன் பிஞ்சு நெஞ்சம்..?? 
"அழாதே அம்மா" என்று  
சொல்லமுடியாமல் சிரித்துகொண்டே  
உலகத்தை எட்டி பார்த்தாய்..


பத்து மாதங்களாக உன்னை  
கட்டி அனைத்து முத்தமிட காத்திருந்தது  
சில்லென்ற வீசிய  காற்றும் தான் ...!!! :) :) 


உன்னை பார்த்த அந்த ஒரு நொடி..., 
அவள் உடல் சிலிர்த்தது.. 
கண்களில் கண்ணீர்.. 
உதட்டில் புன்னகை.. 
மனதில் சந்தோஷம்.. 
புதியதோர் பெயர் அம்மா.. :) :)

கடிகாரம் விலை




என் கைகடிகாரம்  தங்கம்  தான் ..
நீ என் கை  தொட்டு  பார்த்த நேரம் 
விலை  மதிப்பில்லாத  பொக்கிஷம்  ஆனதோ ..?

பிடித்த பெயர் தான் எனக்குமட்டும்







சில  முறை  கேட்ட பெயர்  தான்  - பிடிக்கவில்லை ..
உனக்கான  பெயர் என  அறிந்த  போது 
பல  முறை கேட்டும்  - அலுக்கவில்லை ..

வானிலை அறிக்கை vs காதல் அறிக்கை



"அந்த புயல் நேற்று முன்தினம் மேற்கு நோக்கி திசைமாறியது ... 
காற்றுபலமாக வீசும் என்பதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படும்..." 
தொலைகாட்சியில் செய்தி கேட்டவுடன்..,

அவள் மனசாட்சியில் தலைப்பு செய்திகள் -
"அவன் போக்கு நேற்று முன்தினம் என்னை நோக்கி திசை மாறியது..
பார்வை பலமாக வீசும் என்பதால் மனம் கொந்தளிப்புடன் உணரப்படும்..."

பிறந்த நேரம்/இடம் குற்றமா..?


பிறந்தது  சுரங்கப்பாதையில் 
விளையாடியது  ரயில்  தண்டவாளங்களில் 
வீரத்தை  காண்பித்தது  ரயில்நிலையம்  உணவகத்தில் 
கிடைத்தது  கற்களால்  அடி 
போனது  ஒரு கண் 
அம்மா  என்று  அழைக்க  உடம்பில்  சக்தி  இல்லை 
சில்லென்ற  வீசிய  காற்றில் 
மல்லாந்து படுத்து  உறங்கும்  நேரம் 
வீல்  என்ற  நான்கு  வயது  குழந்தையின்  அலறல் 
அடடா  என்னை  பார்த்தா ..???

மழை  பெய்ந்து  ஓய்ந்த  நேரம் ..
குட்டையில்  தண்ணீர்  பருக  
என்னையே  பார்த்த  அந்த  ஒரு நொடி ..
என்ன  ஒரு கோரமான  பிறவி  நான் ..
சொர்கத்தை  தேடி  ஓடினேன் ..
ஒதுக்கியது  சமூகம் ..
கிடைத்தது உதை ..
சர்ர் என்று ஒரு வண்டியின்  நிறுத்தம் ..
எட்டி  பார்த்தேன் 
அதன்  மேல்  என்னை உதைத்த  அதே  இனத்தின்  கையில் 
 கொஞ்சி  விளையாடியது என்  இனம் ..
அதற்கு  பெயர்  ஸ்வீட்  பப்பி..
என் பெயரோ  தெரு  நாய் ..

25/3/11




சிந்தனை துளிகளில் மிதந்தேன் ..
ஒவ்வொரு துளி பேசிய கதையில் மூழ்கினேன்..
சில நினைவுகளில் சிதறும் சோகங்கள்...
பல நினைவுகளில் குதூகல  கொண்டாட்டங்கள்..

இன்னும் இருப்பதோ பயத்தில் 
புதைந்த வருங்காலத்தின் திட்டங்கள்...
மௌன அலையில் பல பல கனவுகள்..
சுனாமி போல் பொங்கி எழும் திறமைகள்..
சாதிக்க துடிக்கும் நெஞ்சங்கள்..

தலைப்பு செய்திகள் போல் நான்கு 
வருடச்சுவடுகளும் நகர்கையில்.., 
விடைபெறும் நண்பர்கள் கூட்டம்..
கேட்காமல் கேட்கும் சிரிப்புகள் பேச்சுக்கள் 
நம் இதயங்களில் மட்டும் அலையோசையாக..

என்றும் வலியோடு  தித்திக்கும்  நம் கண்ணீர்த்துளி போல்..
அழகான கல்லூரி நாட்கள் ..!!!

தூரத்தில் நீ.. உன் அருகில் நான்..




வெவ்வேறு மனங்கள்
வெவ்வேறு குணங்கள்
வெவ்வேறு மொழிகள்
வெவ்வேறு இடங்கள்
வெவ்வேறு முறையில்
இணைந்த பொழுதும்,
தூரத்தில் இருந்த 
நம் மனங்கள்..,
நெருக்கத்தில் உரையாடின..  
நட்பின் அகராதியை 
புரிந்தவாறு...!!!


நீ பேச நான் பேச
நான் பேச நீ பேச
பேசுவோம் என நீயும் நானும்
பேசாமல் இருந்த பொழுதும்.. 
அமிர்ததில் மிதந்தது
நம் இதயமே.. 

நீ பேசும் பொழுது 
நெஞ்சம் படபடக்க.. 
நீ பாடும் பொழுது 
கண்கள் சொருக.. 

உன் கவிதையை படித்து 
பனியாய் உருகினேன்.., 
என்னை பிடிக்கவில்லை 
என்ற பொழுதும்..

நீ ஏதும் கூறாமல்   
கண்ணீர்  வடிக்க.. 
தவறின் அறிகுறியை  
ஏற்று நட்பின் சுவட்டில் 
நீ எழுதி எழுதி அழிக்க..

நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும் 
பேசாமல் இருந்த பொழுது
நட்பும் முள்ளில்  சிக்கியது..

வலியுடன் அழுது சிதறியது 
ஒன்றுடன் ஒன்று பிணைந்த 
நம் இதயமே.. நாம் அறியாமலே...
காற்றோடு நீ பேச நான் பேச
தேன் அருவியும் பாயவில்லை
நம் காதினிலே..

காத்திருந்த நாட்கள் அனைத்தும் 
மேகங்கள் போல் திசை மாறி மறைந்தன..
நட்பிலே பேசி நட்பிலே பழகி 
நட்பிலேயே முடிந்தது நம் நட்பு..

நான் சிந்தித்த வேலையில் ...



சந்தித்த தினங்களில் ஒன்று..
சில்லென்று  பெய்த மழையில் நடந்து..
என் கை பிடித்தவாறு நின்று..
அருகே சற்று நகர்ந்து..
என் முகம் பார்க்க நிமிர்ந்து ..
சிறு புன்னகையில் உள்ளம் கவர்ந்து ..
ஏதோ திருமொழி சொல்ல வந்து..
சொல்லாமலே சென்றாள்  என் கள்ளி நாணம் கொண்டு..
புரியாமல் புரிந்தது இது காதல் என்று..
பரீட்சை எழுதாமல் நானும் இன்று..
இதை காதல் கவிதை என்று படைத்து..
கண்களால் தோழியை அழகாய் அழைத்து ..
என் படைப்பை காண்பித்தேன் மெல்ல சிரித்து.. :) :) :)
அவளும் சிரித்தாலே கண்கள் விரித்து..
பூரித்து போனேன் மெய் சிலிர்த்து.. ;) :P