நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Showing posts with label missing you. Show all posts
Showing posts with label missing you. Show all posts

Friday, March 16, 2012


"உன் நிழலாய் நான் இருப்பேன்" - என
நிஜமாய் ஒரு பொய் சொன்னாய்..,


தெருவிளக்குகளுக்கு பயந்து இரவில்
வெளியில் வருவதே இல்லை நான்..,


நிழல் மறைந்து மறைந்து போவதால்  
என் மனம் பதறி சிதறி துடிக்கிறது ...

Tuesday, July 26, 2011

உனக்கான நொடிகள்






"நீ தான் என் உயிர் தோழன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் உயிரையே கடவுளாக  எண்ணினேன்...

" உனக்கு என்னை எவ்வளவு  பிடிக்கும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் இன்னமும் முடிக்கவ​ில்லை..

"உனக்காக நான் இருக்கிறேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி ரசித்தேன் என்னை முதல் முறையாக..

"உனக்காக தான் வந்தேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி பொழுதாயின
காத்திருந்த நேரங்கள் அனைத்தும்

"நான் நலம்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தன சந்தோஷக்கடலில்..

"அவனுக்கான கவிதை இதோ" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
 உன்னக்காக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் மறைந்துக்கொண்டன
"அற்புதம்" என்ற என் வார்த்தைக்கு பின்னால்..

"எனக்கு பிடித்த பாடல் " என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
அதன் வரிகள் அனைத்தும் மனதில் பதிந்தன..

"நான் அவனை  காதலிக்கிறேன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கவிதைகள் அனைத்தும் தூக்கில் தொங்கின..

"பேச நேரமில்லை" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
பேசும் மொழியையும் மறந்தேன்

"எனக்கு கவிதை வேண்டும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
மீண்டும் கற்றேன் மறந்த மொழியை

"நாளைக்கு பேசலாம்" என்று நீ சொன்ன அந்த நொடியிளிர்ந்து
அந்த நாளைக்காக இன்னமும் உயிர் வாழ்கிறேன்..

இந்த நொடியில்  நீ உயிரோடு இல்லை
எந்த நொடியிலும் இல்லாத உனக்காக
என்னை  மறந்த காதல் காத்துக்கொண்டிருக்கிறது..




Saturday, May 14, 2011



 "தொலைந்து போ"

என்ற உன் சொல்லுக்கு  எவ்வளவு மரியாதை

இன்னமும் தேடி கொண்டே தான் இருக்கிறேன் 

தொலைந்த என்னை

தொலையாத உன்னுள் . . ! ! 

Friday, May 13, 2011


என்றாவது தான் வெளியே செல்கிறேன்

எத்தனை முகங்கள்

புறக்கண்கள் தேடினது உன்னை மட்டும்...

அலுத்துக்கொண்டேன் நான்...

இந்த கூடத்திலும் நீ இல்லை..

அகக்கண்கள் தேடினது என்னை மட்டும்

நீ வாழும் திசையில்...




உன்னை கொஞ்சமாக பிடிக்கும் என்று  சொன்னேன்
உன்னை நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி

உன்னை பிடிக்கவே இல்லை என்று  சொன்னேன்
உன் பிரிவையும்  நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி



எத்தனை பிறவியும் எடுப்பேன்

உன்னுடன் சேர்ந்து வாழ

"காதலிக்கிறேன்" என்று

ஒருமுறை சொல்லிவிடு போதும்..!!!
  


நீ  ஒரு வார்த்தை பேசினாலே போதும் 
வானில் பறந்து போகிற நான்..
மறுவார்த்தை கேட்கவே
தரையில் இறங்கிவிடுகிறேன்..
 



Friday, April 22, 2011

தலைப்பை இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்



நமக்கான நாட்களை 
வலைவீசி தேடி
நமக்கான பொழுதுகளை
மறுபடி நினைத்துக்கொண்டு
சிரிக்கிறாய் 
அழுகிறாய் ..
பொக்கிஷமாக நெஞ்சில் புதைக்கிறாய் ... 

உனக்கு பிடித்தவன் 
கேட்டு கொண்டே இருந்ததான் 
நீ  பேசி கொண்டே இருக்க..

வருந்துகிறேன்..
ஒரு முறை அவன் பேசி 
நீ கேட்கவில்லையே.. 
இன்று கேட்காமலே சென்றான்
நீ பேசி கொண்டே இருக்க..

நேரம் போனதே தெரியாமல் 
பேசிய பொழுதுகள் கேட்கின்றன
உன்னிடம் பேச அவனுக்கு எங்கே நேரம்...

காத்துக்கொண்டிருந்த பொழுதுகள் கேட்கின்றன
அவனை நினைக்காமல் இருக்க உனக்கு எங்கே நேரம்..

உன் பெயரை எழுதுகையில் அவன் பெயர் மனதில் ஓட 
கவிதை பிறக்கையில் அவனே நினைவில் வர
தலைப்பை மட்டும் இன்னமும் 
தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்  ...





Wednesday, April 13, 2011

தூரத்தில் நீ.. உன் அருகில் நான்..




வெவ்வேறு மனங்கள்
வெவ்வேறு குணங்கள்
வெவ்வேறு மொழிகள்
வெவ்வேறு இடங்கள்
வெவ்வேறு முறையில்
இணைந்த பொழுதும்,
தூரத்தில் இருந்த 
நம் மனங்கள்..,
நெருக்கத்தில் உரையாடின..  
நட்பின் அகராதியை 
புரிந்தவாறு...!!!


நீ பேச நான் பேச
நான் பேச நீ பேச
பேசுவோம் என நீயும் நானும்
பேசாமல் இருந்த பொழுதும்.. 
அமிர்ததில் மிதந்தது
நம் இதயமே.. 

நீ பேசும் பொழுது 
நெஞ்சம் படபடக்க.. 
நீ பாடும் பொழுது 
கண்கள் சொருக.. 

உன் கவிதையை படித்து 
பனியாய் உருகினேன்.., 
என்னை பிடிக்கவில்லை 
என்ற பொழுதும்..

நீ ஏதும் கூறாமல்   
கண்ணீர்  வடிக்க.. 
தவறின் அறிகுறியை  
ஏற்று நட்பின் சுவட்டில் 
நீ எழுதி எழுதி அழிக்க..

நீ பேசுவாய் என நானும்
நான் பேசுவேன் என நீயும் 
பேசாமல் இருந்த பொழுது
நட்பும் முள்ளில்  சிக்கியது..

வலியுடன் அழுது சிதறியது 
ஒன்றுடன் ஒன்று பிணைந்த 
நம் இதயமே.. நாம் அறியாமலே...
காற்றோடு நீ பேச நான் பேச
தேன் அருவியும் பாயவில்லை
நம் காதினிலே..

காத்திருந்த நாட்கள் அனைத்தும் 
மேகங்கள் போல் திசை மாறி மறைந்தன..
நட்பிலே பேசி நட்பிலே பழகி 
நட்பிலேயே முடிந்தது நம் நட்பு..

உன் நினைப்பில் பிடித்த பித்து



எனக்கான அன்பே 
உன்னிடம் இல்லாத பொழுது..
அன்பை வெளிப்படுத்தி பயனேது..??

நினைப்பின் பாலத்தின்
அப்பால் வாழ்ந்தாலும்..,
நினைக்கிறேன்...
மனதில் படகோட்டும் உனக்காக.. 

எனக்கான பல கேள்விகள்
உன்னுள் குவிந்த பொழுது 
மௌனமே உன் சார்பில்
என்னுள் குடியேரியதேன்..??? 

வருடத்தின் திகதிகள்
தண்ணீரில் கரைந்தாலும்
நமக்கான நாட்களை
குறித்துக்கொண்டேன்
என் உயிர் மூச்சில்... 

உன் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழ்வாயா
என நீ கேட்கையில்
வாழட்டுமா..???
என்று என் மனம் பதிலளிக்கையில்..
கேட்காமல் போனது உனக்கு 
என் பொய்யான பேச்சின் சத்தத்தில்...   

எனக்கான காதலே
உன்னிடம் இல்லாத பொழுது 
காதலை சொல்லி வாழ்வேது ..??

பொய்யானது உண்மை சுவடுகள்

உன் நினைவுகளில் 
இருந்தும் இல்லாமல் மூழ்கியது 
நான் மட்டும் அல்ல 
என் பொய்களில் மறைந்த 
காதலும் தான் ..

ரசிக்க ஒரு தேவதை எனக்கு மட்டும்



அன்றொரு நாள் பேசாமல் இருந்தோமே 
எப்படி கடந்தது  உன் நாட்கள் என நீ கேட்கையில் 
உன் மௌனமே கவிதையாக இருந்தது என்றேன் ..

பொய்யான கோபத்தில் உன் உதடுகள் திட்ட திட்ட
உன் சிவந்த கன்னமும் அழகிய கண்களும்
உண்மையையே காட்டின எனக்கு மட்டும் ..


எனக்கான  கவிதை  எங்கே  என நீ கேட்கையில் தான் 
உணர்ந்தேன் ஆஹா இத்தனை நேரம் கவிதையை 
ரசிப்பதிலேயே நேரம் போய்விட்டதே என்று... ;)

என் டைரியில் அவள் உயிர் எழுத்துக்கள்



தனிமையில் கடந்த நாட்களை
நினைத்து பார்க்கையில் உணர்ந்தேன்..  
பறவை போல் அழகாய்
சிறகடித்து என்னிடம் வந்தாய்...
உனக்கான நேரங்களை  
எனக்கான நேரமாய் மாற்றினாய்..
அமுதமாய் பேசி
கவிஞனாய் மலரச்செய்தாய்..
உயிர் தோழி என சொல்லி சொல்லி 
உன் கட்டளையில் என் நாட்களை கடக்க.. 
உன் தாயின் மனம் குளிர 
என்னை  விட்டு விலகினாய்.. 

அன்று புரியாமல் போன உன் அன்பு
இன்று நீ என்றும் கேட்கும் 
உனக்கான கவிதையை 
உன்னிடம் சமர்பிக்க முடியாமல் .. 
தினமும்  பக்கபக்கமாய் கிறுக்குகிறேன் 
நீ வர்ணம் தீட்டிய நான் அறிந்த 
தமிழ் வார்த்தைகளை  கொண்டு...
என் மனம் குளிர 
ஒவ்வொரு கவிதையும் பிறக்கையில் 
நினைக்கிறேன்  உன்னை மட்டும் ..

சொல்லாத பெயரை
சொல்லாத இடத்தில்
சொல்லிவிடாதே என்று
என் மனம் சொல்லி 
துடித்தது..
யாரது உன் 
கவிதைக்குரியவள் 
என்று கேட்கும் இடத்தில்
மௌனமே பதிலாக 
தந்தேன்..

அன்று முதல் 
கேளாமல்
கேள்விக்குறியாய்
நின்றேன்..
 நாம் பேசிய பொழுதுகள் 
என் மனதில் புதைந்த
வர்ணச்சுவடுகள் ஆயின ..
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் 
பிரிந்தது நானும் நீயும் அல்ல..

மீண்டும் சந்திப்போம் ஓவியமாக..
அழகிய என் 
புது கவிதையாக 
காத்திருக்கிறேன்
என்றும் உனக்காக 
முற்று புள்ளி வைக்காமல்

மூன்றாம் பிறை திங்களின் காதல்



உனக்கான வருடத்தில்
மாதம் பன்னிரண்டு
உன்னை பார்க்க
சுற்றிவரும் வருடத்தில் 
எனக்கான மாதம் பதிமூன்று...

உன்னை பதியாக எண்ணி 
பதினைந்தே நாளில் 
ஜொலிக்கும் பவுர்ணமியாய்
மயக்கும் இருட்டில் 
மின்னும் நட்சத்திர கூட்டத்தில்
காத்திருப்பேன் அன்றொரு நாள்
ஒவ்வொரு மாதமும்..

என்னை விலை பேச
பல கவிதைகள் போட்டி போட..
என் மனதை வலை வீச
பல பாடல்கள் பாடி தீண்ட..
நீயோ இருளில் மூழ்கி
வனவாசம் செய்வதேன்...???

உன்னை உரசாமல்
சுற்றி வருகிறேன்
நிலா புவன் என்று
என் பெயர் மாறும் வரை..

என்றும் மௌனமே பதில்
என அறிந்தால் 
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும்  என் மனம்..

தூரத்தில் 
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..  
உன் பார்வை
தீண்டும் வரை..

உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது 
எப்பொழுது..???