நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Showing posts with label poems. Show all posts
Showing posts with label poems. Show all posts

Thursday, November 5, 2015

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!



என் பிதற்றலை ரசித்து
சிதறும் உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை விழுங்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும் என் காதணியை கவர்ந்து
கண்மணியால் மயக்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய் பிதற்றி கொண்ட நாட்களில்
  
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!





கண்ணில் ஒரு அருவியுமாய்
மனசில் ஒரு பாசுமுமாய்
உதட்டில் ஒரு மலருமாய்
சிரித்து பிதற்றிய நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!



 உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை

கடிகார முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!

Monday, September 23, 2013

♥ அழகிய காதல் கதை தொடங்கிய இரவு ♥


" தூங்கலயா ..? " என்று கேட்டாய் 

"எப்படி தூக்கம் வரும் 
என் கடவுளிடம் அல்லவா 
காதலை சொல்லிவிட்டேன்" என்றேன் 

"நானும் தூங்கல தெரியுமா ??"

"ம்ம் .. அப்படியா தெரியாதே .. !!" என்று கொஞ்சினேன் 


"கடவுள் சொல்றேன்'ல தெரிந்துக்கொள்  காதலியே.." என்றாய் 



நாணத்தில் கட்டிகொண்டேன் என் தலையனையை !!

மற்றவை நேரில் ♥ ♥ ♥

உனக்கு கவிதை எழுத தெரியாதா ..?

அதான் நீ காதலுடன்
பார்க்கும் போதும் 
பேசும் போதும் 
கொஞ்சும் போதும் 
நினைக்கும் போதும் 
சிவந்து போகிறேனே நாணத்தில் 
உன் கவிதை பிடிக்காமலா   ??

Thursday, July 25, 2013


மழை கூட விட்டு விட்டு தான் பொழிகிறது ..
ஆனால் உன் கண்கள் மட்டும் என்னை  விடாமல்.., 
கவிதை மழை பொழிகிறதே !!

காதல் மழையில் நனைவது எப்போது ?

Thursday, May 23, 2013

யாரோ இவள் .. ?

ஒரு மாலை நேரம் 
பார்த்துக்கொண்டே இருந்தேன் .. 
"போதும் என்னை படித்தது" என்றாள் .,
என் பேசும் பொம்மையோ ..?





"நீ.. என் அருகில்..
அதனால் ..
இன்னும்  எவ்வளவு நேரம் பறப்போம்"
தயங்கி தயங்கி சட்டென்று சொல்லி முடித்தாள் .,
என் கனவுக்கன்னியோ  ..?

    எழுதி கொண்டு இருந்தேன்
    "அழகான ஓவியம்" என்றாள்
    ஓவியத்தை காண்பித்த பொழுது
    " சிற்பம் அருமை"  என்று 

    பொய் சொன்னாள்  என்  ரசிகையோ ..?


கடற்கரையில் நடந்த பொழுது 
"வானிலிருந்து இறங்கலாமா " என்றாள்
 என் தேவதையோ .. ?


   
   ஒரு முறை  திட்டினேன்
   "போதும் வர்ணித்தது" என்றாள்
   கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டே..
   என் தோழியோ ..?




ஆசை வார்த்தைகளை அவளிடம் சொன்னேன்
"கவிதை அழகாய் இருக்கிறது"
என்றாள் என்னை கட்டிக்கொண்டு
என் குழந்தையோ .. ? 


  

   "இனிமேல் நான் உனக்கு" என்றேன் 
   "இல்லை எனக்கு மட்டுந்தான்" என்றாளே
   
கன்னம்  சிவக்க ..,
   என் காதலியோ..?



"கல்யாணம் நாளைக்கா ? "-என்று கேட்டேன்
"இல்லை ..
இப்பொழுதே .."
என்றாள் கோபமாக ..


என் மனைவி  தான் சந்தேகமே இல்லை !!




Wednesday, May 22, 2013


யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள் 
சந்தித்தால் தான் 
காதல்
கண் சிமிட்டும் என்று 
ஆனால்..
உன் மூக்கில் மேல் 
ஊஞ்சல் ஆடும்  கண்ணாடியை  தானே பார்த்தேன் ..
எனக்கு மட்டும்  ஏன்  இப்படி .. 

Thursday, April 19, 2012




"நான்  நினைத்தால்  புரைலாம்  ஏறவேண்டாம்
என்  கைபேசிக்கு  ஒரு  அழைப்பு  போதும் .." - என்று

அவனை  நினைத்து கைபெசியிடம்
 சண்டையிட்ட - அடுத்த 
அரை  நொடியில்  
அவன்  பெயருடன் அழைப்பு ..





நெஞ்சினில் ஒரு  படபடப்பு ..
அவன்  முதல்  வார்த்தையே

 "என்னை நினைத்தாயா ..?"

 

வெட்கத்தில்  சிவந்தேன் ..
கண்ணீருடன்  சிரித்தேன் ..


காதல் என்ன இத்தனை அழகா ..?


அவன்  பார்க்காத  பொழுது
என்  வெட்கத்தை  தேடுகிறேன்
அதையும்  திருடிவிட்டான்
கள்ளன் !!!

Friday, March 16, 2012


"உன் நிழலாய் நான் இருப்பேன்" - என
நிஜமாய் ஒரு பொய் சொன்னாய்..,


தெருவிளக்குகளுக்கு பயந்து இரவில்
வெளியில் வருவதே இல்லை நான்..,


நிழல் மறைந்து மறைந்து போவதால்  
என் மனம் பதறி சிதறி துடிக்கிறது ...

Saturday, January 14, 2012

நீ என்னை நினைத்துக்கொண்டு
இருந்தாலே போதும்..,
 
ஒவ்வொரு நாளும் எனக்கு
ஒரு காதல் தினம் தான் ..!!
 
 

Wednesday, October 12, 2011

நினைவில் ஒரு சாரல்



பகலில் கொஞ்சம் மழை
அவள் என்றும் கொஞ்சும் மழை..

என்னவள் இல்லை அவள்
என் நினைப்பில் என்றும் அவள்..



மழை பெய்த நேரம்
அவள் வரவில்லை

நான் காத்திருந்தது
மழைக்காகவா..?




"மழை பெய்தால் காதல்
இல்லை என்றாலும் காதல் தான்"
என்று மனதில் ஒரு முடிவு
"இது காதல் என்று சொல்லலாம் "



அவள் கடந்தாள் ஒரு சாரலோடு...
முந்தியது என் குடை ..
பறந்தது அவள் முன்னே ..


மழையில் முழுதும் நனைந்தேன்..
அவள் சிரிப்பில் கொஞ்சம் மூழ்கியே..

அவள் கண்கள் சந்தித்த நொடி..
மின்னலோடு ஒலித்தது இடி..

சில்லென்று ஒரு சாரல்
என் மனதிலும் மின்சாரல் ..

நாட்கள் கடந்தது..
மழையும் நின்றது..

காதலுக்காக நட்பு எனும் உடையுடன்
நான் அன்று அவளுடன் ..

பேசிக்கொண்டே இருப்பாள்..
நான் மிதந்து கொண்டே இருக்க..

அவள் மனம் புரிந்தது..
அவளுக்கு திருமணமும் முடிந்தது..



மாதங்கள் ஓடின ....
அவள் என் நினைவிலிருந்து மறைய ...

மீண்டும் மழை..






அவள் கொஞ்சிய மழை
இன்று என்னுடன்
அவள் ஞாபகமாக ..







ஹ்ம்ம்.. எனக்கும் அழகான முதல் காதல்
"நெஞ்சுக்குள் பெய்திடும்..." பாடல் என் கைபேசியில்
ஒலித்துக்கொண்டே இருக்க..,
அவள் என் நினைவில் என்றாவது  முனுமுனுத்தபடியே ..


Tuesday, July 26, 2011

உனக்கான நொடிகள்






"நீ தான் என் உயிர் தோழன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் உயிரையே கடவுளாக  எண்ணினேன்...

" உனக்கு என்னை எவ்வளவு  பிடிக்கும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் இன்னமும் முடிக்கவ​ில்லை..

"உனக்காக நான் இருக்கிறேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி ரசித்தேன் என்னை முதல் முறையாக..

"உனக்காக தான் வந்தேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி பொழுதாயின
காத்திருந்த நேரங்கள் அனைத்தும்

"நான் நலம்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தன சந்தோஷக்கடலில்..

"அவனுக்கான கவிதை இதோ" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
 உன்னக்காக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் மறைந்துக்கொண்டன
"அற்புதம்" என்ற என் வார்த்தைக்கு பின்னால்..

"எனக்கு பிடித்த பாடல் " என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
அதன் வரிகள் அனைத்தும் மனதில் பதிந்தன..

"நான் அவனை  காதலிக்கிறேன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கவிதைகள் அனைத்தும் தூக்கில் தொங்கின..

"பேச நேரமில்லை" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
பேசும் மொழியையும் மறந்தேன்

"எனக்கு கவிதை வேண்டும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
மீண்டும் கற்றேன் மறந்த மொழியை

"நாளைக்கு பேசலாம்" என்று நீ சொன்ன அந்த நொடியிளிர்ந்து
அந்த நாளைக்காக இன்னமும் உயிர் வாழ்கிறேன்..

இந்த நொடியில்  நீ உயிரோடு இல்லை
எந்த நொடியிலும் இல்லாத உனக்காக
என்னை  மறந்த காதல் காத்துக்கொண்டிருக்கிறது..




Saturday, June 11, 2011





தமிழ் அன்பானது ..!!
"அம்மா... அம்மா... அம்மா சொல்லு ..."
சிலர் பூமியில் கேட்ட
முதல் வாக்கியம்
ஒரு அமுத மொழி
நம் தாய் மொழிந்திட ..

தமிழ் நம் பேச்சானது..!!
பிறர் பேச நாம் கேட்டு
அனைவரும் பேச நாமும் பேசிட..

தமிழ் பழமையானது..!!
திருக்குறள் வாசித்து
அறவழியில் நடந்திட..

தமிழ் அழகானது..
பல சொற்களுக்கு
பொருள் அறிந்து
பக்கம் பக்கமாக எழுதிட..

தமிழ் இனிமையானது...!!
மழலை பேசி
நாம் ரசித்து மகிழ்ந்திட..

தமிழ் காதலானது ..!!
கவிதை பிறந்து
கருத்துக்கள் உணர்ந்திட..

தமிழ் காப்பியமானது..!!
கதை படைத்து
காதல் சிறந்திட..

தமிழ் புகழ் பெற்றது ..!!
பிறர் நம் தமிழ் கற்று
புலமையில் செழிந்திட ..

தமிழ் செம்மொழி ஆனது ..!!
வீரத்தையும் காதலையும்
இரு கண்களாக கொண்டு
திராவிட மக்கள் தமிழ் பேசி வாழ்ந்திட..

தமிழ் தொண்மையில் சிறந்தது..!!
தமிழர் பண்பாடு
யுகங்கள் பல கடந்திட ..

தமிழ் கடவுளானது..!!
முருகா என்று பக்தர்கள்
என்றும் போற்றி வணங்கிட..




Saturday, May 14, 2011



 "தொலைந்து போ"

என்ற உன் சொல்லுக்கு  எவ்வளவு மரியாதை

இன்னமும் தேடி கொண்டே தான் இருக்கிறேன் 

தொலைந்த என்னை

தொலையாத உன்னுள் . . ! ! 

Friday, May 13, 2011


என்றாவது தான் வெளியே செல்கிறேன்

எத்தனை முகங்கள்

புறக்கண்கள் தேடினது உன்னை மட்டும்...

அலுத்துக்கொண்டேன் நான்...

இந்த கூடத்திலும் நீ இல்லை..

அகக்கண்கள் தேடினது என்னை மட்டும்

நீ வாழும் திசையில்...


தமிழை ருசிப்பவர்களை ரசிப்பவள் நான்

என்று தானே கூறினேன்

உனக்கு பிடித்த தமிழ் என்பதால்..




உன்னை கொஞ்சமாக பிடிக்கும் என்று  சொன்னேன்
உன்னை நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி

உன்னை பிடிக்கவே இல்லை என்று  சொன்னேன்
உன் பிரிவையும்  நேசிக்க ஒரு சந்தர்ப்பம் வேண்டி



எத்தனை பிறவியும் எடுப்பேன்

உன்னுடன் சேர்ந்து வாழ

"காதலிக்கிறேன்" என்று

ஒருமுறை சொல்லிவிடு போதும்..!!!
  


நீ  ஒரு வார்த்தை பேசினாலே போதும் 
வானில் பறந்து போகிற நான்..
மறுவார்த்தை கேட்கவே
தரையில் இறங்கிவிடுகிறேன்..
 



Saturday, April 23, 2011

அழகே அழகு..





அன்னியரிடம் பேசினால் 
அடி தான் என்று 
என் வாழ்க்கையின் ஆதியில் 
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே  சொன்னாளே 
அழகே அழகு.. 

மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே   
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..

அன்றொரு நாள் 
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் 
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது 
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
  
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக 
காண்பித்தேனே
அழகே அழகு..

சித்தி ...
எனக்கு ...
மருதாணி... 
என்று நான்கு வயது குழந்தை 
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே 
மருதாணி போட்டு கொண்ட நினைவு 
அழகே அழகு..

அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
 என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..

கண்களை மூடினேன் குழப்பத்துடன் 
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு 
புரியாத புதிர் 
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..

அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன் 
அழகே அழகு...  

என் தோழியை சுற்றி எத்தனை பேர்
 மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல் 
எங்களை  அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ  
இருவர் மட்டும் சேர்ந்து போகயில் 
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு.. 
  
நான் வளர்க்கும் காகம் 
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில் 
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..  

பல நாட்களுக்கு பிறகு  
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும் 
ஒரு குறுந்தகவல்  "enna panra"
அழகே அழகு...  

சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே 
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து 
என் உடையை லேசாக நனைத்தாளே 
அழகே அழகு.. 


நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு.. 

அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே 
அழகே அழகு ..

"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு  சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே    
அழகே அழகு.. 
  
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும்  நடக்கையில் 
உயிர் தோழி என்ற எண்ணம் 
அழகே அழகு...  
  
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 
நிறைய அழகுகள் 
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும் 
அழகே அழகு..