நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Showing posts with label friendship. Show all posts
Showing posts with label friendship. Show all posts

Saturday, April 23, 2011

அழகே அழகு..





அன்னியரிடம் பேசினால் 
அடி தான் என்று 
என் வாழ்க்கையின் ஆதியில் 
முதல் அன்னியராக
திகழ்ந்த என் அன்னையே  சொன்னாளே 
அழகே அழகு.. 

மழை பெய்கிறது
அனைவரும் ஓடுகிறார்கள்
சுடுமோ..??
வெறித்து வெறித்து பார்த்தேன்
மழையில் நனையாதே   
என்று அம்மா சொன்னாள்
வலிக்குமோ..??
என்று பல கேள்விகளுடன்
முதல் முறை மழையை வாரி கட்டிகொண்டேன்
சில்லென்று உடலில் பாய்ந்த ஒரு வித மின்சாரம்
ஹேய்ய்ய்... ஹைய்யா ...
என்று குதித்து விளையாடினேனே ..
அழகே அழகு..

அன்றொரு நாள் 
மின்சாரம் இல்லாத இரவு நேரத்தில் 
ஊ.... என்று நான் சத்தமிட்ட பொழுது 
என் தம்பி அலறி ஓடினானே
அழகே அழகு..
  
முதல் கவிதையை
முதல் வேற்றாளிடம்
முதல் முறையாக 
காண்பித்தேனே
அழகே அழகு..

சித்தி ...
எனக்கு ...
மருதாணி... 
என்று நான்கு வயது குழந்தை 
தயங்கி தயங்கி கேட்கையில்
அதே வயதில் எனக்கு நானே 
மருதாணி போட்டு கொண்ட நினைவு 
அழகே அழகு..

அவள் பேசினாலே பிடிக்கவில்லை
கேட்கவும் விருப்பம் இல்லை
இருப்பினும் நான்கே வருடத்தில்
 என் ஆசை தோழியாய் ஆனாளே
அழகே அழகு..

கண்களை மூடினேன் குழப்பத்துடன் 
பறந்ததோ கனவின் அரண்மனைக்கு 
புரியாத புதிர் 
என் வாழ்கையில் உண்டு
அது ஒரு ஆசிரியர் நடத்திய பாடமே
அழகே அழகு..

அவனுக்காக எதையும் செய்வேன் நான்
அவன் கேட்காமலே நிறைய செய்த பொழுது
நன்றி என்ற ஒற்றை சொல்லில் அவன் 
அழகே அழகு...  

என் தோழியை சுற்றி எத்தனை பேர்
 மனம் திறந்து பேச வாய்ப்பே இல்லை..
சில்லென்று காற்று வீச..,
மரங்களின் நிழல் 
எங்களை  அணைக்க துடிக்க..
எங்கும் அமைதி நிலவ  
இருவர் மட்டும் சேர்ந்து போகயில் 
ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லையே..
அழகே அழகு.. 
  
நான் வளர்க்கும் காகம் 
காக்கா காக்கா என்று என் வீட்டு ஜன்னலில் 
எட்டி பார்த்து என்னை அழைத்ததே..
அழகே அழகு..  

பல நாட்களுக்கு பிறகு  
நமக்கு பிடித்தவரிடம் இருந்து வரும் 
ஒரு குறுந்தகவல்  "enna panra"
அழகே அழகு...  

சிரித்துகொண்டே கை நீட்டிய குழந்தையை
வாரி அணைத்தேனே 
அதன் வாயிலிருந்து அமிர்தம் பொழிந்து 
என் உடையை லேசாக நனைத்தாளே 
அழகே அழகு.. 


நான் முதன்முதலில் ரசித்த கவிதைகளை
படைத்தவனுக்கு நான் தான் குருவாம்
பொய்யோ மெய்யோ
அவன் சொற்கள் அனைத்துமே
அழகே அழகு.. 

அம்மா என்று தான் நான் அழைத்தேன்
என்னம்மா என்று என் தந்தை கேட்டாரே 
அழகே அழகு ..

"நான் யார் உனக்கு"
என்று கேட்கையில்
"ஹ்ம்ம்... எத்தனை முறை தான்
உனக்கு  சொல்வது" என்று அலுத்துக்கொண்டானே    
அழகே அழகு.. 
  
ஒரு விரல் கோர்த்து
நானும் அவளும்  நடக்கையில் 
உயிர் தோழி என்ற எண்ணம் 
அழகே அழகு...  
  
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் 
நிறைய அழகுகள் 
காத்துக்கொண்டிருக்கின்றன
ரசிகர்கள் இல்லாமல்
இதுவும் 
அழகே அழகு..



Wednesday, April 13, 2011

25/3/11




சிந்தனை துளிகளில் மிதந்தேன் ..
ஒவ்வொரு துளி பேசிய கதையில் மூழ்கினேன்..
சில நினைவுகளில் சிதறும் சோகங்கள்...
பல நினைவுகளில் குதூகல  கொண்டாட்டங்கள்..

இன்னும் இருப்பதோ பயத்தில் 
புதைந்த வருங்காலத்தின் திட்டங்கள்...
மௌன அலையில் பல பல கனவுகள்..
சுனாமி போல் பொங்கி எழும் திறமைகள்..
சாதிக்க துடிக்கும் நெஞ்சங்கள்..

தலைப்பு செய்திகள் போல் நான்கு 
வருடச்சுவடுகளும் நகர்கையில்.., 
விடைபெறும் நண்பர்கள் கூட்டம்..
கேட்காமல் கேட்கும் சிரிப்புகள் பேச்சுக்கள் 
நம் இதயங்களில் மட்டும் அலையோசையாக..

என்றும் வலியோடு  தித்திக்கும்  நம் கண்ணீர்த்துளி போல்..
அழகான கல்லூரி நாட்கள் ..!!!

நான் சிந்தித்த வேலையில் ...



சந்தித்த தினங்களில் ஒன்று..
சில்லென்று  பெய்த மழையில் நடந்து..
என் கை பிடித்தவாறு நின்று..
அருகே சற்று நகர்ந்து..
என் முகம் பார்க்க நிமிர்ந்து ..
சிறு புன்னகையில் உள்ளம் கவர்ந்து ..
ஏதோ திருமொழி சொல்ல வந்து..
சொல்லாமலே சென்றாள்  என் கள்ளி நாணம் கொண்டு..
புரியாமல் புரிந்தது இது காதல் என்று..
பரீட்சை எழுதாமல் நானும் இன்று..
இதை காதல் கவிதை என்று படைத்து..
கண்களால் தோழியை அழகாய் அழைத்து ..
என் படைப்பை காண்பித்தேன் மெல்ல சிரித்து.. :) :) :)
அவளும் சிரித்தாலே கண்கள் விரித்து..
பூரித்து போனேன் மெய் சிலிர்த்து.. ;) :P 

Wednesday, September 1, 2010

friends