நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Tuesday, October 23, 2012





என் கைபேசியும் கவிபாடுகிறதே...
அழைப்பது நீ என அறிந்தோ ... !!!

Thursday, April 19, 2012





கண்ணாடி  முன்  சிரித்து  சிரித்து
தேடி  பார்த்தேன் ..,


நிஜமாகவே  அவன்  தந்த  முத்தங்கள்
என்  கன்னங்குழி  விழுங்கி  தான்
விட்டது  போலும் ... !!



"நான்  நினைத்தால்  புரைலாம்  ஏறவேண்டாம்
என்  கைபேசிக்கு  ஒரு  அழைப்பு  போதும் .." - என்று

அவனை  நினைத்து கைபெசியிடம்
 சண்டையிட்ட - அடுத்த 
அரை  நொடியில்  
அவன்  பெயருடன் அழைப்பு ..





நெஞ்சினில் ஒரு  படபடப்பு ..
அவன்  முதல்  வார்த்தையே

 "என்னை நினைத்தாயா ..?"

 

வெட்கத்தில்  சிவந்தேன் ..
கண்ணீருடன்  சிரித்தேன் ..


காதல் என்ன இத்தனை அழகா ..?


அவன்  பார்க்காத  பொழுது
என்  வெட்கத்தை  தேடுகிறேன்
அதையும்  திருடிவிட்டான்
கள்ளன் !!!

Friday, March 16, 2012


"உன் நிழலாய் நான் இருப்பேன்" - என
நிஜமாய் ஒரு பொய் சொன்னாய்..,


தெருவிளக்குகளுக்கு பயந்து இரவில்
வெளியில் வருவதே இல்லை நான்..,


நிழல் மறைந்து மறைந்து போவதால்  
என் மனம் பதறி சிதறி துடிக்கிறது ...

Saturday, January 14, 2012

நீ என்னை நினைத்துக்கொண்டு
இருந்தாலே போதும்..,
 
ஒவ்வொரு நாளும் எனக்கு
ஒரு காதல் தினம் தான் ..!!
 
 

Wednesday, October 12, 2011

நினைவில் ஒரு சாரல்



பகலில் கொஞ்சம் மழை
அவள் என்றும் கொஞ்சும் மழை..

என்னவள் இல்லை அவள்
என் நினைப்பில் என்றும் அவள்..



மழை பெய்த நேரம்
அவள் வரவில்லை

நான் காத்திருந்தது
மழைக்காகவா..?




"மழை பெய்தால் காதல்
இல்லை என்றாலும் காதல் தான்"
என்று மனதில் ஒரு முடிவு
"இது காதல் என்று சொல்லலாம் "



அவள் கடந்தாள் ஒரு சாரலோடு...
முந்தியது என் குடை ..
பறந்தது அவள் முன்னே ..


மழையில் முழுதும் நனைந்தேன்..
அவள் சிரிப்பில் கொஞ்சம் மூழ்கியே..

அவள் கண்கள் சந்தித்த நொடி..
மின்னலோடு ஒலித்தது இடி..

சில்லென்று ஒரு சாரல்
என் மனதிலும் மின்சாரல் ..

நாட்கள் கடந்தது..
மழையும் நின்றது..

காதலுக்காக நட்பு எனும் உடையுடன்
நான் அன்று அவளுடன் ..

பேசிக்கொண்டே இருப்பாள்..
நான் மிதந்து கொண்டே இருக்க..

அவள் மனம் புரிந்தது..
அவளுக்கு திருமணமும் முடிந்தது..



மாதங்கள் ஓடின ....
அவள் என் நினைவிலிருந்து மறைய ...

மீண்டும் மழை..






அவள் கொஞ்சிய மழை
இன்று என்னுடன்
அவள் ஞாபகமாக ..







ஹ்ம்ம்.. எனக்கும் அழகான முதல் காதல்
"நெஞ்சுக்குள் பெய்திடும்..." பாடல் என் கைபேசியில்
ஒலித்துக்கொண்டே இருக்க..,
அவள் என் நினைவில் என்றாவது  முனுமுனுத்தபடியே ..


Monday, September 26, 2011

கல்யாணம் முடிஞ்சாச்சு !!!! காதலில் விழுந்தாச்சு !!!!



எனக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக
தூங்க மடி தரும் அன்னையாக..,

கை பிடித்து நடக்கும் தந்தையாக
தோள் சாய்ந்து  பேசும் தோழியாக..,
அடித்து சண்டையிடும் தம்பியாக
என்றும் பாதுகாக்கும் அண்ணனாக..,

காதலோடு பழக காதலனாக
என் வாழ்க்கைக்கு துணையாக ..,
வந்த 
என் கணவனால்  

புரிந்துக்கொண்டேன் காதலை !!!





முதல் காதல் 

"ஏன் சிரிக்கிறாய்" ,என்று கோபமாக  தான் கேட்டேன்
அவனோ " உன் கோபத்தில் எனக்கு ஒரு கவிதை தோணுச்சு 
என் சிரிப்பில் உனக்கு ஒரு காதல் தோன்றியது போல"
என்றானே சிரித்துக்கொண்டே
மறுபடியும் விழுந்தேன் காதலில்..



வெட்கத்தில் கொஞ்சம் கண்ணீர் 

"நீ குழந்தையடி"  என்று கேலி செய்ய
"இல்லை இல்லை நான் உனக்கு என்றும் பிடித்த அம்மா" என்றதும்
"ஏன் நான் அம்மா மாதிரி இல்லையா..?" 
"ம்ம்ம்..?" என்று விழித்ததில்.. சிரித்தான்..
இம்முறை காதல் என் கண்களில் கண்ணீராக ..



இரவில் பேசிய ரகசியம் 

என் காதருகில் ரகசியம் பேசினான் " தூங்கிட்டியா" 
"இல்லையே.." என்றேன் 
" அப்போ காதலிக்கிறேன்னு சொல்லு " என்று அதட்டினான் 
"நான் தூங்கிட்டேன் .." என்றேன் சட்டென்று 
" ம்ம்ம் .. குட்நைட்  கள்ளி " என்றானே சிரித்துக்கொண்டே..
பார்க்கவில்லை என்றாலும் 
அவன் சிரிப்பதை உணர்ந்தேன் 
காதலில் விழுந்தேன்
கனவில் மிதந்தேன் .. 



என் கணவனுக்கு நான் தான் காதலி 

நடு ராத்திரியில் என்னை எழுப்பி
"என் காதலி  
காதலை சொல்லுடி" என்றான் 
"என் கணவா
இது என்ன கனவா ??? " 
என்று  தூக்க-கலக்கத்தில்  கேட்க  

"நிஜமா 
நிஜத்தில் 
ஒரே ஒரு முறை.."

"நானும் சிரிப்பேனே "ஈ...."
காதலில் விழு பிறகு சொல்றேனே .."
.........................
பதில்  வரவே  இல்லை  


  

நெஞ்சம் பொறுக்கவில்லை அழுகை நிறுத்தவில்லை 

ஒரு மாலை நேரம் 
சிரித்துக்கொண்டே இருந்தான்
ஏதோ ஒரு சங்கடத்தில் " என் இப்படி சிரிக்கிற " என்று கேட்க
" நீ காதலில் விழுவாய் என்றால்
சிரித்துக்கொண்டே கூட  சாவேன்
என் செல்லமே.." என்றானே போதும்
விடியும் வரை அழுது கொட்டி தீர்த்தேன்.., 
என்னவன் சமாதானம் செய்து கொண்டே இருக்க.. 



விடிந்ததும் குழப்பம் 


தூங்கிகொண்டே இருந்தான்
நான் பார்த்துக்கொண்டே இருக்க

கண்கள் மூடியபடி 
உதடு மட்டும் அசைந்தது " பார்த்தது போதும்" என்றான் 
புன்முறுவலில் என்னை மயக்கியபடி ..
" பார்க்க பார்க்க பிடிக்குமோ என்று பார்த்தேன்" என்றேன் முணுமுணுத்தப்படி 

" அப்போ பிடிக்கலையா ..?" என்று கண்விழித்து  கேட்டான்
பதில் சொல்லாமல் கடுப்பில் சென்றேன்..
அவன் குரல் மட்டும் தூரத்தில்
"எங்கடி போற..??? 
..................................
சரி என்ன பாரேன் கொஞ்ச நேரம்.. 
...................................
நிஜமாவே பிடிக்கலையா ..??? "
வெட்கத்தில் ஒளிந்தேன்
சமையல் அறையில்...  



காதலை சொல்லியாச்சு 

" என் கால்களை
தொட துடிக்கும் 
அலைகள் மீது 
என்ன கோபமோ..
என்னை தூக்கிக்கொண்டே நடந்தா
னே
சிடு சிடுவென கடற்கரையில்.."


"கோபமா..??"
என்று கேட்டேன்  தயக்கத்துடன் 
"ம்ம்.." பதில் மட்டும் விடுக்கென்று 

"எவ்ளோ கோவம்??"
"..................."
"சொல்லேன்"
".................."
"சிரி"
"........................."

"ஹ்ம்ம்.. 
சரி  .. 
காதலிக்கிறேன் போதுமா..?"
"......................."
பதில் சொல்லாமல் விடு விடு என்று நடந்துக் கொண்டே இருந்தான் ..

"என்ன ஆச்சு..??"
என்று அலையோசை சத்தத்தையும் மீறி கேட்க 


" நானும் காதலிக்கிறேன் "
என்றான் பொறுமையாக..

"ஓஹோ எப்போதிலிருந்து ..?"
என்றேன் மெதுவாக 
"நீ அப்போ சிரிச்ச ல.."
பதில் வந்தது மிகவும் சாதாரணமாக 
"நா உன்ன மாதிரி அழகாலாம் சிரிக்க மாட்டேனே.."என்றேன் 

"போடி பைத்தியம் " என்று சொல்லி சிரித்தானே
அட கடவுளே.. 
எத்தனை முறை தான்
நான் காதலில் விழுவேன்.. !!!!

 

Tuesday, July 26, 2011

உனக்கான நொடிகள்






"நீ தான் என் உயிர் தோழன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் உயிரையே கடவுளாக  எண்ணினேன்...

" உனக்கு என்னை எவ்வளவு  பிடிக்கும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
நட்சத்திரங்களை எண்ண ஆரம்பித்தேன் இன்னமும் முடிக்கவ​ில்லை..

"உனக்காக நான் இருக்கிறேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி ரசித்தேன் என்னை முதல் முறையாக..

"உனக்காக தான் வந்தேன்" என்று நீ சொன்ன
அந்த ஒரு நொடி பொழுதாயின
காத்திருந்த நேரங்கள் அனைத்தும்

"நான் நலம்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கஷ்டங்கள் அனைத்தும் கரைந்தன சந்தோஷக்கடலில்..

"அவனுக்கான கவிதை இதோ" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
 உன்னக்காக நான் எழுதிய கவிதைகள் அனைத்தும் மறைந்துக்கொண்டன
"அற்புதம்" என்ற என் வார்த்தைக்கு பின்னால்..

"எனக்கு பிடித்த பாடல் " என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
அதன் வரிகள் அனைத்தும் மனதில் பதிந்தன..

"நான் அவனை  காதலிக்கிறேன்" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
என் கவிதைகள் அனைத்தும் தூக்கில் தொங்கின..

"பேச நேரமில்லை" என்று நீ சொன்ன அந்த ஒரு நொடி
பேசும் மொழியையும் மறந்தேன்

"எனக்கு கவிதை வேண்டும்" என்று நீ கேட்ட அந்த ஒரு நொடி
மீண்டும் கற்றேன் மறந்த மொழியை

"நாளைக்கு பேசலாம்" என்று நீ சொன்ன அந்த நொடியிளிர்ந்து
அந்த நாளைக்காக இன்னமும் உயிர் வாழ்கிறேன்..

இந்த நொடியில்  நீ உயிரோடு இல்லை
எந்த நொடியிலும் இல்லாத உனக்காக
என்னை  மறந்த காதல் காத்துக்கொண்டிருக்கிறது..




Saturday, June 11, 2011





தமிழ் அன்பானது ..!!
"அம்மா... அம்மா... அம்மா சொல்லு ..."
சிலர் பூமியில் கேட்ட
முதல் வாக்கியம்
ஒரு அமுத மொழி
நம் தாய் மொழிந்திட ..

தமிழ் நம் பேச்சானது..!!
பிறர் பேச நாம் கேட்டு
அனைவரும் பேச நாமும் பேசிட..

தமிழ் பழமையானது..!!
திருக்குறள் வாசித்து
அறவழியில் நடந்திட..

தமிழ் அழகானது..
பல சொற்களுக்கு
பொருள் அறிந்து
பக்கம் பக்கமாக எழுதிட..

தமிழ் இனிமையானது...!!
மழலை பேசி
நாம் ரசித்து மகிழ்ந்திட..

தமிழ் காதலானது ..!!
கவிதை பிறந்து
கருத்துக்கள் உணர்ந்திட..

தமிழ் காப்பியமானது..!!
கதை படைத்து
காதல் சிறந்திட..

தமிழ் புகழ் பெற்றது ..!!
பிறர் நம் தமிழ் கற்று
புலமையில் செழிந்திட ..

தமிழ் செம்மொழி ஆனது ..!!
வீரத்தையும் காதலையும்
இரு கண்களாக கொண்டு
திராவிட மக்கள் தமிழ் பேசி வாழ்ந்திட..

தமிழ் தொண்மையில் சிறந்தது..!!
தமிழர் பண்பாடு
யுகங்கள் பல கடந்திட ..

தமிழ் கடவுளானது..!!
முருகா என்று பக்தர்கள்
என்றும் போற்றி வணங்கிட..