நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
நீ அனுப்பாமல் வைத்திருந்த - அத்தனை
குறுஞ்செய்திகளையும்
ஒரே நாளில் ஏனடா அனுப்பினாய் ..,
என் கைபேசி திணறுகிறது
எனக்கான உன் காதல் கடலில்..
இரவு முழுவதும் பேசிவிட்டு
நேரில் நீ என்னை பார்த்து சிரித்தால் போதும்
என் கைபேசி " lowbattery " - என்று
பொறாமை தீயில் எரிகிறதே..!!
எத்தனை முத்தம் தான்
உன் கைபேசிக்கே தருவாய் ..,
ஒரு முறை எனக்கு தருவாயா . . ,
உன் கவிதை முத்தங்கள்..
நீ பேசாமல் இருந்ததால்
என் கைபேசி "switchoff " ஆகிவிட்டது ..,
இப்போது நாம் பேசலாமா .,
ரகசியமாக.. !!
நீ அழைத்தால் ...
என் கைபேசி மட்டும் அல்ல - நானும்
"vibrate" ஆகிவிடுகிறேன்
ஏதோ ஒரு நாணத்தில் ..,
எதிர்பார்ப்பில் ..,
காதலில் ..!!
உன் குறுஞ்செய்தியால் ..,
என் கைபேசி சிவந்து விடுகிறது - வெட்கத்தில்
நானும் தான் .,
படித்த பிறகு .. !!
என் கைபேசியும் கவிபாடுகிறதே...
அழைப்பது நீ என அறிந்தோ ... !!!
கண்ணாடி முன் சிரித்து சிரித்து
தேடி பார்த்தேன் ..,
நிஜமாகவே அவன் தந்த முத்தங்கள்
என் கன்னங்குழி விழுங்கி தான்
விட்டது போலும் ... !!
"நான் நினைத்தால் புரைலாம் ஏறவேண்டாம்
என் கைபேசிக்கு ஒரு அழைப்பு போதும் .." - என்று
அவனை நினைத்து கைபெசியிடம்
சண்டையிட்ட - அடுத்த
அரை நொடியில்
அவன் பெயருடன் அழைப்பு ..
நெஞ்சினில் ஒரு படபடப்பு ..
அவன் முதல் வார்த்தையே
"என்னை நினைத்தாயா ..?"
வெட்கத்தில் சிவந்தேன் ..
கண்ணீருடன் சிரித்தேன் ..
காதல் என்ன இத்தனை அழகா ..?
அவன் பார்க்காத பொழுது
என் வெட்கத்தை தேடுகிறேன்
அதையும் திருடிவிட்டான்
கள்ளன் !!!