நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, November 5, 2015

சில்லென்ற மரங்களின் காற்றில்
பெருநகரத்தின் ஜொலிக்கும்  ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும் கூட்டத்திலும்
மயங்கும் இருட்டிலும்

ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று

அனைத்து காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது போல் ஒரு உணர்வு

அத்தருணம் போதுமே
எனக்கான நம் கவிதை உலகம் உயிர் வாழ



ஒவ்வொரு வருடமும்
மறுபடியும் பிறக்க நினைக்கிறன்
பல நாள் கழித்து நீ வாழ்த்தும்

எனக்கான மகிழ்ச்சியான பிறந்த நாளில்


" பேசணும்னு தான்  நினைப்பேன் "
என்று நீ சொன்னதும்
" கவிதை எழுதட்டுமா " என்று கேட்டது
அந்த ஒரு நிமிட நிசப்தம்

கவிதையே பேசுவது என்று புரியாமல் 

சுற்றிலும் ஆயிரம் பேர் - ஏனோ
ஆளில்லா தீவில் இருந்தது போல்
சில நொடிகளாக சென்ற பலமணி நேரத்தில்
கொஞ்சமாக தான்
மௌனத்திலும்
பார்வையிலும்
சிரிப்பிலும்
பேசிகொண்டோம்
உன் கண்மணிகள்
தேடின மக்கள் அலையில்
என் கண்களை கண்டதும்
உன் பெருமூச்சு அனுப்பிய கவிதை மடலை
கண்டுகொண்டேன் நானும் கண்டுகொண்டேன்

சிந்திய சோறும் கவிதை எழுதும்
- நீ உண்ணும் அழகில்

மயங்கினேன் நானும் .. !!

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!



என் பிதற்றலை ரசித்து
சிதறும் உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை விழுங்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும் என் காதணியை கவர்ந்து
கண்மணியால் மயக்கினாய் நீயும்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய் பிதற்றி கொண்ட நாட்களில்
  
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!





கண்ணில் ஒரு அருவியுமாய்
மனசில் ஒரு பாசுமுமாய்
உதட்டில் ஒரு மலருமாய்
சிரித்து பிதற்றிய நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!



 உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை

கடிகார முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!




நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த நாட்களில்

காதல் அலை அடித்து விழுந்தேன் நானும்..!!

Monday, January 19, 2015

பேசும் விழிகளாம் ....!!


பேசும் விழிகளாம் ....!!
உன் அழகிய விழிகள் 
எல்லோரிடமும் பேசட்டும் 

அதனால் என்ன ..!!!????

எனக்கும் மட்டும் தானே புரியும் 
உன் கயல் விழிகள் கொஞ்சமாக பாடும் 
கொஞ்சும் வரிகள் ...!! 



Monday, February 3, 2014

♥ நானும் என்னவனும் ♥ - 2

 




நீ  
காதல் முத்தங்கள் மூலம் 
பேசி கொண்டிருக்கையில்
காதல் நாணத்தில் 
கேட்டு கொண்டிருக்கிறேன் 
நான் 

நமக்கான புதுக்கவிதை உலகத்தில் ! ! 

Sunday, October 13, 2013

♥ நானும் என்னவனும் ♥


என் கவிதைகளுக்கு உயிர் கொடுப்பேன் 

      என்று சொல்லி - என் கரம் பிடித்து 


என் காதலுக்கு உயிர் ஊட்டிவிட்டான் 

   
      ♥ என் கணவன் என் தோழன் ♥