நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Thursday, July 25, 2013


மழை கூட விட்டு விட்டு தான் பொழிகிறது ..
ஆனால் உன் கண்கள் மட்டும் என்னை  விடாமல்.., 
கவிதை மழை பொழிகிறதே !!

காதல் மழையில் நனைவது எப்போது ?

Thursday, May 23, 2013

யாரோ இவள் .. ?

ஒரு மாலை நேரம் 
பார்த்துக்கொண்டே இருந்தேன் .. 
"போதும் என்னை படித்தது" என்றாள் .,
என் பேசும் பொம்மையோ ..?





"நீ.. என் அருகில்..
அதனால் ..
இன்னும்  எவ்வளவு நேரம் பறப்போம்"
தயங்கி தயங்கி சட்டென்று சொல்லி முடித்தாள் .,
என் கனவுக்கன்னியோ  ..?

    எழுதி கொண்டு இருந்தேன்
    "அழகான ஓவியம்" என்றாள்
    ஓவியத்தை காண்பித்த பொழுது
    " சிற்பம் அருமை"  என்று 

    பொய் சொன்னாள்  என்  ரசிகையோ ..?


கடற்கரையில் நடந்த பொழுது 
"வானிலிருந்து இறங்கலாமா " என்றாள்
 என் தேவதையோ .. ?


   
   ஒரு முறை  திட்டினேன்
   "போதும் வர்ணித்தது" என்றாள்
   கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டே..
   என் தோழியோ ..?




ஆசை வார்த்தைகளை அவளிடம் சொன்னேன்
"கவிதை அழகாய் இருக்கிறது"
என்றாள் என்னை கட்டிக்கொண்டு
என் குழந்தையோ .. ? 


  

   "இனிமேல் நான் உனக்கு" என்றேன் 
   "இல்லை எனக்கு மட்டுந்தான்" என்றாளே
   
கன்னம்  சிவக்க ..,
   என் காதலியோ..?



"கல்யாணம் நாளைக்கா ? "-என்று கேட்டேன்
"இல்லை ..
இப்பொழுதே .."
என்றாள் கோபமாக ..


என் மனைவி  தான் சந்தேகமே இல்லை !!




Wednesday, May 22, 2013


யார்  யாரோ  சொல்லுவர் -கண்கள் 
சந்தித்தால் தான் 
காதல்
கண் சிமிட்டும் என்று 
ஆனால்..
உன் மூக்கில் மேல் 
ஊஞ்சல் ஆடும்  கண்ணாடியை  தானே பார்த்தேன் ..
எனக்கு மட்டும்  ஏன்  இப்படி .. 

Wednesday, October 24, 2012

நீ அனுப்பாமல் வைத்திருந்த - அத்தனை
குறுஞ்செய்திகளையும்
ஒரே நாளில் ஏனடா அனுப்பினாய் ..,

என் கைபேசி திணறுகிறது
எனக்கான  உன் காதல் கடலில்..

Tuesday, October 23, 2012



இரவு முழுவதும் பேசிவிட்டு
நேரில் நீ என்னை பார்த்து சிரித்தால் போதும்
என் கைபேசி "  lowbattery " - என்று
பொறாமை தீயில் எரிகிறதே..!!





எத்தனை முத்தம் தான்
உன் கைபேசிக்கே  தருவாய் ..,

ஒரு முறை எனக்கு தருவாயா . . ,
உன் கவிதை முத்தங்கள்..



 

நீ பேசாமல் இருந்ததால் 
என் கைபேசி "switchoff " ஆகிவிட்டது ..,
இப்போது நாம் பேசலாமா .,
ரகசியமாக.. !!
நீ அழைத்தால் ...
என் கைபேசி மட்டும் அல்ல - நானும்
"vibrate" ஆகிவிடுகிறேன் 
ஏதோ ஒரு நாணத்தில் ..,
                              எதிர்பார்ப்பில் ..,
                                                காதலில்  ..!!


உன் குறுஞ்செய்தியால் ..,
என் கைபேசி சிவந்து விடுகிறது - வெட்கத்தில்

நானும் தான் .,
                  படித்த பிறகு .. !! 




என் கைபேசியும் கவிபாடுகிறதே...
அழைப்பது நீ என அறிந்தோ ... !!!