நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Thursday, November 5, 2015
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!
என் பிதற்றலை ரசித்து
சிதறும்
உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை
விழுங்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும்
என் காதணியை கவர்ந்து
கண்மணியால்
மயக்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய்
பிதற்றி கொண்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
கண்ணில்
ஒரு அருவியுமாய்
மனசில்
ஒரு பாசுமுமாய்
உதட்டில்
ஒரு மலருமாய்
சிரித்து
பிதற்றிய நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை
கடிகார
முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு
வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த
நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
Monday, January 19, 2015
Monday, February 3, 2014
Sunday, October 13, 2013
Monday, September 23, 2013
Subscribe to:
Posts (Atom)















