நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்
Thursday, November 5, 2015
சில்லென்ற
மரங்களின் காற்றில்
பெருநகரத்தின்
ஜொலிக்கும் ஒளிகளில்
நாம் செல்லும் எதிர் எதிர் பாதையிலிருந்து
தூரத்திலும்
கூட்டத்திலும்
மயங்கும்
இருட்டிலும்
ஏனோ திரும்பி நின்று
நம் கண்கள் கலந்ததோ அன்று
அனைத்து
காதல் பாடல்களும்
அந்த சில நொடிகளுக்காகவே
பாடியது
போல் ஒரு உணர்வு
அத்தருணம் போதுமே
எனக்கான
நம் கவிதை உலகம் உயிர்
வாழ
காதல் அலை அடித்து விழுந்தேன் நானும் ..!!
என் பிதற்றலை ரசித்து
சிதறும்
உன் முத்தான சிரிப்பால்
நேரத்தை
விழுங்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உன் பிதற்றலை ரசித்து
தலையாட்டும்
என் காதணியை கவர்ந்து
கண்மணியால்
மயக்கினாய் நீயும்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
என் கனவில் நீயும்
உன் கனவில் நானும்
வருவதாய்
பிதற்றி கொண்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
கண்ணில்
ஒரு அருவியுமாய்
மனசில்
ஒரு பாசுமுமாய்
உதட்டில்
ஒரு மலருமாய்
சிரித்து
பிதற்றிய நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
உலகமே மறைந்தது போல்
நம் கண்கள் பிதற்றிய ரகசியத்தை
கடிகார
முட்களும் ஒட்டு கேட்ட நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
நம் ஒவ்வொரு பிதற்றலும்
ஒவ்வொரு
வரிகளாய்
என் கவிதையினை
அலங்கரித்த
நாட்களில்
காதல் அலை அடித்து விழுந்தேன்
நானும்..!!
Monday, January 19, 2015
Monday, February 3, 2014
Sunday, October 13, 2013
Monday, September 23, 2013
Thursday, July 25, 2013
Thursday, May 23, 2013
யாரோ இவள் .. ?
ஒரு மாலை நேரம்
பார்த்துக்கொண்டே இருந்தேன் ..
"போதும் என்னை படித்தது" என்றாள் .,
என் பேசும் பொம்மையோ ..?
"நீ.. என் அருகில்..
அதனால் ..
இன்னும் எவ்வளவு நேரம் பறப்போம்"
தயங்கி தயங்கி சட்டென்று சொல்லி முடித்தாள் .,
என் கனவுக்கன்னியோ ..?
அதனால் ..
இன்னும் எவ்வளவு நேரம் பறப்போம்"
தயங்கி தயங்கி சட்டென்று சொல்லி முடித்தாள் .,
என் கனவுக்கன்னியோ ..?
எழுதி கொண்டு இருந்தேன்"அழகான ஓவியம்" என்றாள்
ஓவியத்தை காண்பித்த பொழுது
" சிற்பம் அருமை" என்று
பொய் சொன்னாள் என் ரசிகையோ ..?
கடற்கரையில் நடந்த பொழுது
"வானிலிருந்து இறங்கலாமா " என்றாள்
என் தேவதையோ .. ?
ஒரு முறை திட்டினேன்
"போதும் வர்ணித்தது" என்றாள்
கண்ணை சிமிட்டி சிரித்துக்கொண்டே..
என் தோழியோ ..?
ஆசை வார்த்தைகளை அவளிடம் சொன்னேன்
"கவிதை அழகாய் இருக்கிறது"என்றாள் என்னை கட்டிக்கொண்டு
என் குழந்தையோ .. ?
"இனிமேல் நான் உனக்கு" என்றேன்
"இல்லை எனக்கு மட்டுந்தான்" என்றாளே
கன்னம் சிவக்க ..,
என் காதலியோ..?
"கல்யாணம் நாளைக்கா ? "-என்று கேட்டேன்
"இல்லை ..
இப்பொழுதே .."
என்றாள் கோபமாக ..
என் மனைவி தான் சந்தேகமே இல்லை !!
Wednesday, May 22, 2013
Subscribe to:
Posts (Atom)

























