நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, April 13, 2011

உன் நினைப்பில் பிடித்த பித்து



எனக்கான அன்பே 
உன்னிடம் இல்லாத பொழுது..
அன்பை வெளிப்படுத்தி பயனேது..??

நினைப்பின் பாலத்தின்
அப்பால் வாழ்ந்தாலும்..,
நினைக்கிறேன்...
மனதில் படகோட்டும் உனக்காக.. 

எனக்கான பல கேள்விகள்
உன்னுள் குவிந்த பொழுது 
மௌனமே உன் சார்பில்
என்னுள் குடியேரியதேன்..??? 

வருடத்தின் திகதிகள்
தண்ணீரில் கரைந்தாலும்
நமக்கான நாட்களை
குறித்துக்கொண்டேன்
என் உயிர் மூச்சில்... 

உன் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழ்வாயா
என நீ கேட்கையில்
வாழட்டுமா..???
என்று என் மனம் பதிலளிக்கையில்..
கேட்காமல் போனது உனக்கு 
என் பொய்யான பேச்சின் சத்தத்தில்...   

எனக்கான காதலே
உன்னிடம் இல்லாத பொழுது 
காதலை சொல்லி வாழ்வேது ..??

மின்சாரம் இல்லாமல் என் உடலில் பாய்ந்த மின்சாரம்



மேகங்களின்  இருட்டில்
அடர்ந்த வனம்
 நிசப்தத்தில்..

காற்றை பிடிக்க
தரையில் ஊர்ந்தோடிய
இலைகள்...

மெல்ல மெல்ல
சிரித்து குலுங்கிய
மரங்கள்..

மின்னல் ஒளியில்
தெரிந்த அவன்
கண்கள்..

அவள் உதட்டில் விழுந்த
அந்த முதல் வெள்ளி துளியை
சுட சுட சுட்டெரித்த 
அவன் பார்வை..

ஒரு கவிதையையே 
எழுதி விட்டான் 
அந்த கள்ளன்
அவள் கண்கள் வாயிலாக..

வெப்பம் அதிகரிக்க மிக அருகில்..
அவன் விடும் மூச்சை சுவாசிக்கிறாள்  
என்ற படபடப்பில் 
இருந்த - அவள்,
செவிகளை உரசி ரகசியம் பேசினான்

காதில் விழுந்ததோ ஒற்றை சொல் " Silence  "

கட்டி இறுக்கிய நொடியில்
மின்சாரம் பாய்ந்த வேகத்தில்
ஜோர் என்று வாரி அணைத்தது
மழை துளிகள் ..

என்னையும் அவனையும் மட்டும் ..

குழம்பினேன் ஏதும் புரியாமல்..

அவர்களை பார்க்க சகிக்க முடியாமல்
கண்களை இறுக்கி மூடினேன்..

என் உதடோ
என் கரிகாலன் என்று
ஏதோ உறவு கொண்டாடி
முனுமுனுக்க..

திடுக்கென  ஏதோ பயத்தில் கனவிலிருந்து விழித்து
ஆச்சர்யத்தின் உச்சகட்டத்தில் நான்
முழுவதுமாக நனைந்திருக்கிறேன் என்று உணர்கையில் ...
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
-------------Aiyyooo veetla current illa :( :( :P :D --------------

பொய்யானது உண்மை சுவடுகள்

உன் நினைவுகளில் 
இருந்தும் இல்லாமல் மூழ்கியது 
நான் மட்டும் அல்ல 
என் பொய்களில் மறைந்த 
காதலும் தான் ..

ரசிக்க ஒரு தேவதை எனக்கு மட்டும்



அன்றொரு நாள் பேசாமல் இருந்தோமே 
எப்படி கடந்தது  உன் நாட்கள் என நீ கேட்கையில் 
உன் மௌனமே கவிதையாக இருந்தது என்றேன் ..

பொய்யான கோபத்தில் உன் உதடுகள் திட்ட திட்ட
உன் சிவந்த கன்னமும் அழகிய கண்களும்
உண்மையையே காட்டின எனக்கு மட்டும் ..


எனக்கான  கவிதை  எங்கே  என நீ கேட்கையில் தான் 
உணர்ந்தேன் ஆஹா இத்தனை நேரம் கவிதையை 
ரசிப்பதிலேயே நேரம் போய்விட்டதே என்று... ;)

என் டைரியில் அவள் உயிர் எழுத்துக்கள்



தனிமையில் கடந்த நாட்களை
நினைத்து பார்க்கையில் உணர்ந்தேன்..  
பறவை போல் அழகாய்
சிறகடித்து என்னிடம் வந்தாய்...
உனக்கான நேரங்களை  
எனக்கான நேரமாய் மாற்றினாய்..
அமுதமாய் பேசி
கவிஞனாய் மலரச்செய்தாய்..
உயிர் தோழி என சொல்லி சொல்லி 
உன் கட்டளையில் என் நாட்களை கடக்க.. 
உன் தாயின் மனம் குளிர 
என்னை  விட்டு விலகினாய்.. 

அன்று புரியாமல் போன உன் அன்பு
இன்று நீ என்றும் கேட்கும் 
உனக்கான கவிதையை 
உன்னிடம் சமர்பிக்க முடியாமல் .. 
தினமும்  பக்கபக்கமாய் கிறுக்குகிறேன் 
நீ வர்ணம் தீட்டிய நான் அறிந்த 
தமிழ் வார்த்தைகளை  கொண்டு...
என் மனம் குளிர 
ஒவ்வொரு கவிதையும் பிறக்கையில் 
நினைக்கிறேன்  உன்னை மட்டும் ..

சொல்லாத பெயரை
சொல்லாத இடத்தில்
சொல்லிவிடாதே என்று
என் மனம் சொல்லி 
துடித்தது..
யாரது உன் 
கவிதைக்குரியவள் 
என்று கேட்கும் இடத்தில்
மௌனமே பதிலாக 
தந்தேன்..

அன்று முதல் 
கேளாமல்
கேள்விக்குறியாய்
நின்றேன்..
 நாம் பேசிய பொழுதுகள் 
என் மனதில் புதைந்த
வர்ணச்சுவடுகள் ஆயின ..
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் 
பிரிந்தது நானும் நீயும் அல்ல..

மீண்டும் சந்திப்போம் ஓவியமாக..
அழகிய என் 
புது கவிதையாக 
காத்திருக்கிறேன்
என்றும் உனக்காக 
முற்று புள்ளி வைக்காமல்

மூன்றாம் பிறை திங்களின் காதல்



உனக்கான வருடத்தில்
மாதம் பன்னிரண்டு
உன்னை பார்க்க
சுற்றிவரும் வருடத்தில் 
எனக்கான மாதம் பதிமூன்று...

உன்னை பதியாக எண்ணி 
பதினைந்தே நாளில் 
ஜொலிக்கும் பவுர்ணமியாய்
மயக்கும் இருட்டில் 
மின்னும் நட்சத்திர கூட்டத்தில்
காத்திருப்பேன் அன்றொரு நாள்
ஒவ்வொரு மாதமும்..

என்னை விலை பேச
பல கவிதைகள் போட்டி போட..
என் மனதை வலை வீச
பல பாடல்கள் பாடி தீண்ட..
நீயோ இருளில் மூழ்கி
வனவாசம் செய்வதேன்...???

உன்னை உரசாமல்
சுற்றி வருகிறேன்
நிலா புவன் என்று
என் பெயர் மாறும் வரை..

என்றும் மௌனமே பதில்
என அறிந்தால் 
என்றோ வெடித்து
நொறுங்கிற்கும்  என் மனம்..

தூரத்தில் 
காத்திருக்கிறேன்
நீ வாழும் இரவில் ..  
உன் பார்வை
தீண்டும் வரை..

உன்னையே நினைத்து
தினம் தினம் தேய்கிறேன்..
என்னை ஈர்க்கும் சக்திக்கு
என் மனம் புரிவது 
எப்பொழுது..???

மூன்றே வார்த்தை காதலில் விழுந்த வித்தை









"காதலிக்கிறேன்...." என்று தொடங்கி
".....உன் நட்பை" என்று நீ முடித்த
அந்த ஒரு நொடி பொழுதில் 
எனக்கான அழகான முதல் காதலை உணர்ந்தேன்.. 

Wednesday, September 1, 2010

...!!!!????

friends