நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, April 13, 2011

என் டைரியில் அவள் உயிர் எழுத்துக்கள்



தனிமையில் கடந்த நாட்களை
நினைத்து பார்க்கையில் உணர்ந்தேன்..  
பறவை போல் அழகாய்
சிறகடித்து என்னிடம் வந்தாய்...
உனக்கான நேரங்களை  
எனக்கான நேரமாய் மாற்றினாய்..
அமுதமாய் பேசி
கவிஞனாய் மலரச்செய்தாய்..
உயிர் தோழி என சொல்லி சொல்லி 
உன் கட்டளையில் என் நாட்களை கடக்க.. 
உன் தாயின் மனம் குளிர 
என்னை  விட்டு விலகினாய்.. 

அன்று புரியாமல் போன உன் அன்பு
இன்று நீ என்றும் கேட்கும் 
உனக்கான கவிதையை 
உன்னிடம் சமர்பிக்க முடியாமல் .. 
தினமும்  பக்கபக்கமாய் கிறுக்குகிறேன் 
நீ வர்ணம் தீட்டிய நான் அறிந்த 
தமிழ் வார்த்தைகளை  கொண்டு...
என் மனம் குளிர 
ஒவ்வொரு கவிதையும் பிறக்கையில் 
நினைக்கிறேன்  உன்னை மட்டும் ..

சொல்லாத பெயரை
சொல்லாத இடத்தில்
சொல்லிவிடாதே என்று
என் மனம் சொல்லி 
துடித்தது..
யாரது உன் 
கவிதைக்குரியவள் 
என்று கேட்கும் இடத்தில்
மௌனமே பதிலாக 
தந்தேன்..

அன்று முதல் 
கேளாமல்
கேள்விக்குறியாய்
நின்றேன்..
 நாம் பேசிய பொழுதுகள் 
என் மனதில் புதைந்த
வர்ணச்சுவடுகள் ஆயின ..
எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் 
பிரிந்தது நானும் நீயும் அல்ல..

மீண்டும் சந்திப்போம் ஓவியமாக..
அழகிய என் 
புது கவிதையாக 
காத்திருக்கிறேன்
என்றும் உனக்காக 
முற்று புள்ளி வைக்காமல்

1 comment:

  1. வாழ்கை அனைவருக்குமே சில அழகிய பக்கங்களை தந்துள்ளது
    சில பக்கங்கள் கண்ணீர்பட்டு அழிந்துவிடுகிறது
    கண்ணீரின் காரணம் சோகமோ
    சந்தோஷமோ
    அழிந்த எழுத்துகளின் பக்கங்கள்
    திரும்ப தெரிவதே இல்லை
    மரணித்து போகும்வரை,

    மரணத்தின் அந்த கடைசி நொடியில் வந்து போகலாம்
    அழியாத பல பக்கங்கள்
    அழிந்த சில பக்கங்களை சுமந்தபடியே

    உங்கள் கவிதையும், புன்னகையும் அழியாமல் இருக்க
    இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete