நம் அருமை தெரியாதவர்களிடம் சேர்ந்தால் பெருமை எல்லாம் பாழ்


Wednesday, April 13, 2011

புதிய பெயர்




நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி.. 
அவள் உடல் சிலிர்த்தது.. 
கண்களில் கண்ணீர்.. 
உதட்டில் புன்னகை.. 
முகத்தில் வெட்கம்.. 
மனதில் சந்தோஷம்.. 
புதியதோர் உணர்வு..


நாட்கள் கடந்த வேகமோ அதிகம்.. 
தனியாக சிரித்தாள் - பைத்தியமில்லை.. 
ரகசியமாக பேசினாள்  - கைபேசி காதல் இல்லை..
 அமுத மொழிகளையும்  
ஆசை வார்த்தைகளையும்  
பேசி கொஞ்சி 
உன்னை அழகாக  கவர்ந்தாள் அவள் அறியாமலேயே.. 
ஏனோ இன்ப வேதனையில் மூழ்கினாள்..


அறுசுவை உணவும் பழச்சாறும்  பிடிக்கவில்லை.. 
உண்ணவும் மறுக்கவில்லை.. 
"உறங்காமல் எந்த நாட்டை பிடிக்க இந்த ஆழ்ந்த சிந்தனை"  - என்ற  
வசை மொழிகள் அவள் காதில் விழவில்லை.. 
எதிர்காலத்தின் கனவுகள் - அவள்  
உயிரோடு கலந்துவிட்ட உனக்காக  
அவள் போடும்  திட்டங்கள்
இயற்கை தீட்டும் வண்ணங்களுக்கு சமமாகுமா...??? 


உன் முகம் பாராமல் அவள்  காட்டும் அன்போ  
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்.. 
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!! 
பூமியில் கால் கூட பதிக்காமல்  
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்  
அவள் அன்பில் சிறைபட்டாய்.. 
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???


நகங்களால் கீறி உன்  
ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினாய்.. 
உலகத்தின் சார்பில் அவள் - ஒருத்தி 
காத்திருந்தாள் உனக்காக மட்டும்.. 
அவள் அழுதால் கதறினால் - வலி  
தாங்குமா உன் பிஞ்சு நெஞ்சம்..?? 
"அழாதே அம்மா" என்று  
சொல்லமுடியாமல் சிரித்துகொண்டே  
உலகத்தை எட்டி பார்த்தாய்..


பத்து மாதங்களாக உன்னை  
கட்டி அனைத்து முத்தமிட காத்திருந்தது  
சில்லென்ற வீசிய  காற்றும் தான் ...!!! :) :) 


உன்னை பார்த்த அந்த ஒரு நொடி..., 
அவள் உடல் சிலிர்த்தது.. 
கண்களில் கண்ணீர்.. 
உதட்டில் புன்னகை.. 
மனதில் சந்தோஷம்.. 
புதியதோர் பெயர் அம்மா.. :) :)

4 comments:

  1. சிகரங்களை நோக்கி நடைபயிலுகிறாய்..
    காலமும் நேரமும் உதவிட
    நீ நிமிர்ந்து பார்த்திட
    வானமே எல்லையாய் - உன் காலடியில் சிகரங்கள்..!

    இவ்வரிகள் பெரிதாக தெரியலாம்.., குறித்து வைத்துகொள், வருங்காலத்தில் ஒருநாள் நீயே
    எனக்கு படித்துகாட்டுவாய்.

    நிறைய படித்துகொண்டிருகிறாய் என தெரிகிறது, படிப்பின் முதிர்ச்சி எழுத்தில் தெரியும்.

    -கார்த்திக் ஜீவானந்தம்

    ReplyDelete
  2. wowwwwww...
    thanq soooooooooo much bro :) :) :) :)
    im very happy :) :) :) :)
    Got d first comment :) :) :)

    ReplyDelete
  3. மழையென தூறும் தமிழ் துளியே சற்று கேளடி
    கற்றனை தூறும் அறிவு முடிந்தது குறளடி,
    எனினும்

    முடிவில்லாதது நம் உலகில்?அது அறிவே! சற்றும்
    குறைல்லாதது உன்தமிழ் கவியின் நடை அழகே! பரபரவென

    நில்லாத உலகில் தமிழ் மலிது ஆங்கிலம் துரிது
    இருளில்லாத முழு நிலவின் ஒளியே! நீ அரிதினும் அரிது!


    சொல்லில்லாத new line space கண்டாய் அது வார்த்தையில்லாத வாழ்த்து
    எல்லையில்லாத தமிழின்பம் கண்டேன் இது களங்கமில்லாத கவிபூங்கொற்று

    சிந்தனை செல்வியே! பறவைஎன செல்வியே!

    ReplyDelete
  4. Im flyin in air... :) :) :)
    nice lines brother :) :) :) :)
    Thanq :)

    ReplyDelete